வல்வையின் கரையில் இருந்து புறப்பட்டு புயலையும் பெரும்அலைகளையும் தாண்டி நீண்ட
பயணத்தின்பின்னர் அமெரிக்காவை வல்வையின் ‘அன்னபூரணி’ கப்பல்சென்றடைந்து
வருடகின்றவருடம் 75 வருடங்களாகின்றன.
1938ம்ஆண்டு அமெரிக்காவின் ‘BOSTON GLOBE’ பத்திரிகை தனது முகப்பில் வெளியிட்ட செய்தியை ஆவணமாக
தருகின்றோம்.இன்று நிவீனவிஞ்ஞானமும் நெவிக்கேற்றர்களும் வளர்ச்சியடைந்த காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கப்பல் சென்றடைவது என்பது ஏதோ சாதாரணமானதுதான்.ஆனால் 75வருடங்களுக்கு முன்னர் விஞ்ஞானஉபகரணங்களைவிட அலைகளின் வேகத்தையும் ஓட்டத்தையும் வானத்தின் இயல்பையும் கணித்துக்கொண்டே கடலோடிய எமது மூதாதையர்
என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்,
அவர்களின் நினைவாக இந்த ஆவணம்