வல்வெட்டித்துறையில் நீண்ட நாட்களின் பின் புலிகள் கூட்டம் மக்கள் இடை புகுந்தது.24.04.2021
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிலவ வருட மகோற்சவம் நடைபெற்று வந்து நேற்றைய தினம் பன்னிரண்டாம் திருவிழா ஆகிய புலிவேட்டை திருவிழா நடைபெற்றது.
அந்த நேரத்தில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தெற்கு வீதியை அண்டிய நேரத்தில் கோபுர வீதியில் சலசலப்புடன் புலிகள் நுழைந்தது.
பன்னிரண்டாம் திருவிழாவை புலி வேட்டைத்திருவிழா சிறப்பிக்கும் வண்ணம் சிலம்பாட்டம் வானவேடிக்கை புலி வேட்டை அதாவது வேடன் வேடுவிச்சி உட்பட புலிகள் கூட்டம், புலிகள் குடும்பம்,சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் வரை புலிச்சீருடையணிந்து புலி வர்ணம் பூசி புலி போன்று உருமாறி புலி வேட்டை திருவிழா நடைபெறும்.
இதில் சிறுவர்களை மகிழ்வித்தும் பயமுறுத்தியும் சேட்டை காட்டியும் வேடுவர்கள் வேட்டையாடி வேடுவச்சியின் சுளகு அடியும் மக்களை பரவசம் அடையச் செய்து விளையாடுவார்கள்.
இது தொன்றுதொட்டு நடைபெறும் வரலாற்று சிறப்பு அம்சங்களோடு கலை நிகழ்வாகும்.