மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம்

மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம்

மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது.

காந்தி பயன்படுத்திய பொருட்களுடன் இன்னும் பல முக்கிய வரலாற்று ஆவணங்களும் ஏலத்து விடப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த முல்லொக்ஸ் ஏல விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது.
காந்தி அணிந்த ஒரு சோடி காலணி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலத்துக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 1932-இல் காந்தியை ஒரு பயங்கரவாதி என்று அறிவிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற ஆவணமொன்றும் இந்த ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
அவ்வாறே காந்தியும் நேருவும் பிரித்தானியாவால் 1942-இல் கைது செய்யப்பட்டதைக் காட்டும் படமொன்றும் காந்தி கோட் சூட் அணிந்திருப்பதைக் காட்டும் மிக அரிதான பத்திரிகை படம் ஒன்றும் விற்பனைக்கு வந்துள்ளன.
மே 21-ம் திகதி நடக்கவுள்ள இந்த ஏல விற்பனையில் 300க்கும் அதிகமான பொருட்கள் விற்கப்படவுள்ளன.

இதில் 1916-ம் ஆண்டில் ஏற்பட்ட ஈஸ்டர் கிளர்ச்சியின்போது வெளியிடப்பட்ட அயர்லாந்து சுதந்திரப் பிரகடனத்தின் ஒரேயொரு அச்சுப் பிரதியும் ஏலத்துக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.