ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா காலப்பகுதியில் கொடிய நில ஆக்கிரமிப்பு
300 ஏக்கர் காணியில் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள் சகிதம் கொண்டுவந்து நிறுவப்பட்டுள்ளது.சீனாவின் படைத்தளம் முகாமா…/ஆதரவான படைமுகாம்.
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சீனாவின் இராணுவ கட்டளை பீடமா.என எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.18.06.2021
01தமிழர் தாயகப் பகுதியில் நில ஆக்கிரமிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் குருந்தூர் மலை பகுதியில் பொது மண்டபம் அமைப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர்கள் பௌத்த பிக்குகளும் இணைந்து அடிக்கல் நாட்டு விழா மேற்கொண்டுள்ளனர்.
02 காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஏழு ஏக்கர் கொண்ட ஜனாதிபதி மாளிகை விற்கப்பட இருப்பதாக செய்திகள் இது தனியாருக்கு சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டதாகும்.
03.இயக்கச்சி பகுதியில் 700 ஏக்கர் இராணுவத்தினருக்கு சூபிகரிகப்பதற்கு அளவிட முனைந்த போது அதை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.இப்பொழுது ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் 300 ஏக்கர் காணியில் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள் சகிதம் கொண்டுவந்து நிறுவப்பட்டுள்ளது.
04.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை 700 ஏக்கர் கொண்ட பாரிய படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது
05.கோத்தபாய படைத்தள முகாம் /வட்டுவாகல் படைத்தளம் முகாம் 634 ஏக்கர் இதனை நேரடியாக தடுத்து நிறுத்திய காரணத்தினால் வழக்குப்பதிவு செய்து ஆஜரானோம் .
06.மண்டலாய பிள்ளையார் கோவில் பகுதியில் இராணுவ நில அளவையாளர்கள் அளவீடு செய்யப்பட்டு படைத்தளம் அமைக்கப்பட்டு வருகின்றது .
இப்படி அமைக்கப்பட்டுவரும் முகாம்கள் சீனாவின் படைத்தளம் முகாமா…/ஆதரவான படைமுகாம்
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சீனாவின் இராணுவ கட்டளை பீடமா.எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்களுடைய நிரந்தரமான ஒரு தீர்வுக்கு இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பாக இருக்கலாம் , ஐரோப்பிய யூனியன் ஆக இருக்கலாம் நேட்டோ அமைப்பாக இருக்கலாம் அதனுடைய பலத்தை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு உரிய நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டி நின்றார்.
இது இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்ட விடயங்களை எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.