இந்தியாவுடன் நட்புறவு கூடாது என பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட காஷ்மீர் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்த எச்சரிக்கையை பயங்கரவாதிகள் விடுத்துள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தை கைவிட்டால் நவாஸ் ஷெரீப் மட்டுமல்ல வேறு யாரும் பாகிஸ்தானில் ஆட்சி நடத்த முடியாது எனவும், பாகிஸ்தான் அரசு என்பது இல்லாமல் போகும் எனவும் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது சலாகுதீன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.