தம்பி அப்பா (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார்
தம்பி அப்பா (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார் என்று அறியமுடிகிறது.
சமாதான காலத்தில் கிளிநொச்சில் பேச்சுவார்த்தைகள் தடல் புடலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்..
புதிய புதிய பெறுமதிவாய்ந்த வாகனங்கள் வன்னியின் தெருக்களில் வலம்வரும்.
வாகனங்களும் மனிதர்களும் பரபரப்பாகிக்கொண்டிருக்க வீதிகள் மறிக்கப்பட்டிருக்கும்.
பரவிப்பாஞ்சானில் மிதி வண்டியில் வயர் பாக் (bag) கொழுவியபடி ஒரு முதியவர் வருவார்.. அந்த மிதிவண்டி வருவதில் தாமதம் ஏற்பட்டால் அங்கிருப்பவர்கள் பரபரப்பாகியிருப்பதை பல நாள் பார்த்திருக்கிறோம். வருவார் பலா மரத்தில் மிதிவண்டியை சாத்திவிட்டு உள்ளே செல்வார். அதன் பின்னரேயே பேச்சுக்கள் தொடங்கும்.
உங்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்..