மாணவி கிருசாந்தி நினைவேந்தல்!
11 இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்து செம்மணியிலே புதைத்தனன்.செம்மணி படுகொலை 25வது ஆண்டு நினைவு நாள் 07.09.2021
தேடிச் சென்ற தம்பி, தாய், அயலவர் ஒருவருமாக நால்வரையும் அடித்தே கொண்ட காமவெறியர்கள்!
மாணவி கிருஷாந்தி குமாரசாமி அவரது தாயார் இராசம்மா அயலவர் கிருபா மூர்த்தி தம்பி பிரணவன் ஆகியோர் இலங்கை இறுவணுத்தால் படுகொலை செய்யப்பட்ட செம்மணி படுகொலை 25வது ஆண்டு நினைவு நாள் 07.09.2021
11 இராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை GENOCIDE உட்பட்ட குற்றச்சாட்டுகளை புரிந்த குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றல் INTERANTIONAL CRIMINAL COURT) நிறுத்துவோம்.
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஈடு செய் நீதி REMEDIAL JUSTICE யை பெறக்கூடிய விதத்திலும் இனப்படுகொலையை மீண்டும் இடம்பெறாமல் இருக்க மீள நிகழாமை NON RECURRENCE யை உறுதிப்படுத்தக் கூடிய விதத்திலும்,தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தெரிந்துகொள்ள கூடிய விதத்திலும், வட-கிழக்கு மாநிலத்தில் பொதுசன வாக்கெடுப்பு (REFERENDUM) ஒன்றை நடாத்த முன்வருமாறு QUAD அமைப்பை (இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா) ஆகிய நாடுகள் அடங்கியது)கோருகின்றோம்.
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு எமது கண்ணீர் அஞ்சலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது.