நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் விமான விமான குண்டு தாக்குதலில் 21மாணவச்செல்வங்கள் உட்பட 32 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் 26ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22.09.1995ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற விமான குண்டு தாக்குதலில் 21மாணவச்செல்வங்கள் உட்பட 32 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் 26ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்
இதனை வருடா வருடம் நகர்கோவில் கிராம மக்கள் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பது வழமை்
இம்முறையும் இதனை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுட்டிப்பதற்கு இது சம்மந்தமாக நிர்வாகம் வலயக்கல்வி அலுவலகம்,மற்றும் பிரதேச பொதுச்சுகாதார அதிகாரி அவர்களின் அனுமதியைக்கோரியிருந்த சமயம் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது் எனவே மக்கள் பிரதிநிதியாக ஆ.சுரேஸ்குமார்,
பிரதேச வட்டார உறுப்பினர்
அவர்கள் அஞ்சலிகளை இன்று மேற்கொண்டிருந்தார்கள்
மேலும் இன்றைய நாள் பிரதேச சபை அமர்வில் விசேடமாக விமானக்குண்டுத்தாக்குதலில் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு சபை அமர்வுகள் ஆரம்பமானதும் இப்பிரதேசத்திற்கு அருகாமையில் அதிகாலை வேளை இராணுவத்தினர் வாகனத்தில் இறக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.