ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை என இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தான் பேச வேண்டும் அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து இருக்க வேண்டும்

ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை. இலங்கை அரசுடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு சமம்.

நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய நாடுகளின் உடைய பொதுச் சபைக் கூட்டத் தொடரிலே  உலக தலைவர்கள் உரையாற்றுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி திரு கோத்தபாய ராஜபக்ச அவர்கள் உரையாற்றியிருக்கின்றார் இலங்கை ஜனாதிபதிகளாக  இருந்தவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தவர்களுக்கு  சொல்லொன்று செயல் ஒன்றுமாக செய்வதும் சர்வதேசத்தை உலகத்தை ஏமாற்றுவதும் அவர்களுக்கு கைவந்த கலை 2009 போர்  முடிவுக்கு வந்தவுடனேயே ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகமாக இருந்த திரு பான்கீ மூன் அவர்கள் இலங்கைக்கு வந்து வானில் இருந்தபடி முள்ளிவாய்க்கால் போர் இடம்பெற்ற எல்லாப் பகுதிகளையும் பார்த்த பின்னர் அன்றைய இலங்கை   ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு அறிக்கையை விடுத்த அதற்கு முன்னர் எத்தனையோ விடயங்களை இந்தியாவுக்கு பச்சைப் பொய்களை சொன்னார்கள் 2008ஆம் ஆண்டு இலங்கையினுடைய சுதந்திர தினத்திலேயே சொன்னேன் என்னுடன் இருக்கக்கூடிய டக்லஸ் தேவானந்தா அவர் விரும்புவதை போலாவது இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில சுயாட்சி கொடுக்க வேண்டும் அதைப்போல தமிழர் விடுதலைக் கூட்டணி திரு ஆனந்தசங்கரி கேட்டதைப் போல கொடுக்க வேண்டும். என்றீர்கள் எங்கே கொடுத்தீர்கள்  13++ என்றீர்கள் பொழுது 13- – இல்ல 13 இல்லாமல் போகின்ற நிலைமை இருக்கின்றது இதைவிட அதைவிட என்ன ஒரு கேலிகூத்துச்செய்தீர்கள் அதற்கு இந்தியாவினுடைய பிரபல பத்திரிகை ஹிந்து போன்றன அதனுடைய ஆசிரியரான திரு ராம்  போன்றவர்கள் உடந்தையாக இருந்தார்கள். (சைபர் கசுவேலிட்டி ) பூச்சியம் நம் மக்களுடைய இழப்பு பூச்சியம் என்ற பூச்சாண்டியை காட்டினீர்கள் ஆனால் இழப்பு ஐநாவின் உடைய அறிக்கையின்படி 40,000 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு அறிக்கையும், அதன் பின்னர் இன்னொரு அறிக்கை 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் கணக்கில் வராமலும் Anaccountable என்று வந்திருக்கின்றது. ஆகவே உங்களுடைய தில்லுமுல்லு எல்லாம் தெரியும் இன்றைக்கு உள்நாட்டுப் பொறிமுறையில் நாங்கள் செய்வோம் என்று கூறுகின்றீர்கள் ஒருபோதும் நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை நம்ப தயாராக இல்லை.  கொலைகாரன் நீதிபதியை நியமிப்பதை இவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்.

ஆகவே சர்வதேசத்தின் ஊடாகத்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச நீதி பொறிமுறையினூடாகவே எங்களுக்கு நீதி கிடைக்கும்.ஆகவே நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.சர்வதேச நீதி பொறிமுறை 3 இவ்வாறான விடயங்களை செய்யக்கூடிய விதத்தில் அதை நிரூபிக்கப்பட்ட அதன்பின்னர் நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, உண்மையை கண்டறிதல்,பொறுப்புக்கூறல் போன்றவற்றினூடாக அங்கே மீளநிகழாமை NON RECURRENCE  என்று சொல்வார்கள் இவ்வளவும் செய்யப்படுகின்ற ஈடு செய் நீதி        REMEDIAL JUSTICE   எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

ஆகவே GENOCIDE INTERANTIONAL CRIMINAL COURT அதே போல NON RECURRENCE இவ்வாறான விடயங்களை முன்னெடுக்க கூடிய விதத்திலே ஈடுசெய் நீதியை REMEDIAL JUSTICE நாங்கள் கோரி நிற்கின்றோம்.அதன் ஊடாகத் தான் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை REFERENDUM தை நடத்துவதன் ஊடாகத்தான் இதை சாதிக்க முடியும். இந்த ஐந்து விடயங்களையும் ஏதாவது ஒரு நாடு அல்லது அமைப்பு முன்வர வேண்டும் ஐநாவின் மேற்பார்வையில் நாங்கள் விசேடமாக QUAD அமைப்பை பார்த்து கேட்க விரும்புகின்றோம். இந்தியா அமெரிக்கா ஜப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய இப்போது   QUAD ன் கூட்டத்திற்காக இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி பயணமாகியுள்ளார். ஆகவே நீங்கள் செய்ய வேண்டும் ஐநா மேற்பார்வை செய்ய வேண்டும் ஒரு நாட்டினுடைய மத்தியஸ்த்துக்கு கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோர்வே மாத்திஷ்த்திற்கு வந்தது ஆகவே ஒரு குழாம் இருக்க வேண்டும் ஒரு குழு இருக்க வேண்டும் மூன்றாம் தரப்பு இல்லாமல் யாரும் பேச முடியாது.அதே இலங்கையில் இருக்கின்ற தரப்புக்களாக இருக்கட்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புக்களாக இருக்கட்டும் சர்வதேச மத்தியஸ்த்தின் ஊடாகத்தான் நாங்கள் விடயங்களை செய்ய வேண்டும்.இதை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை வருமாறு அழைக்கின்றீர்களே இது தான் நல்லாட்சி அரசாங்கத்தின் பொழுதும் நடைபெற்றது. மீண்டும் ஆட்சி மாற்றம் என்றார்கள் பொழுது எங்களிலும் பலபேர் இதை சொல்கிறார்கள் ஆட்சி மாற்றம் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது இன்றைக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகவே ஒன்று வந்தால் சொல்வர் பூவா தலையா ஆகவே இவரை மாற்றி அவரை மாற்றினால்   கொஞ்சம் வேகம் குறைய குறைவு கூடவே ஒழிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

ஆகவே எங்களுடைய மக்கள் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய ஒரு சுயநிர்ணயம் உரிமையின் அடிப்படையில் sel veedamin லே அந்த வாக்கெடுப்பில் ஊடாகத்தான் எங்களுக்கான நீதியை நிலைநாட்டபடும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இதைத் தவிர இன்றைக்கு புலம்பெயர் அமைப்பு பல வந்து ஓடி வந்து பேசினார்கள் இப்போது அவர்கள் சிங்கப்பூரிலேயே பேசினார்கள் அப்போது அவர்கள் சொல்லும் சொல்லுகின்றார்கள். லண்டனிலேயே பேசினோம்  ஜேர்மனியில் பேசினோம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அன்றைய முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த பின்னர் இவர்களுடைய ஆட்சி மாற்றத்திலே கொண்டு வரப்பட்ட அமரர் மங்கள சமரவீரர்  போன்றோர்களுடன் பேசியதாக சொன்னார்கள் சிங்கப்பூரிலே

ஆகவே இந்த Golbal tamil forme GTM. அந்த நேரத்தில் 14 அமைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது இன்றைக்கு அவர்களுக்கு கீழே இருக்கக்கூடிய ஒரே ஒரு கனேடிய தமிழ் காங்கிரஸ் CTC மாத்திரம் அது வெறும்  காகித அமைப்பாக வந்துவிட்டது கடிதத் தலைப்பாக லெட்டர் கெட் ஓகணேசன்  திரு சுரேன் சுரேந்திரன் போன்றவர்கள் இன்றைக்கு வணபிதா அடிகளார் அவர்கள் இமானுவேல் அடிகளார் ஐயா பேசாமல் இருக்கிற மாதிரி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து யாரும் நீங்கள் பேச முடியாது. நாங்கள் தெட்டத் தெளிவாக சொல்ல விரும்புகின்றோம் நீங்கள் உங்களுக்கு வேண்டுமானால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்தது போன்று இப்போது ஏழு நட்சத்திர ஹோட்டலில் வைக்கட்டும் சீனாவினுடைய சங்கரர் சங்கரில்லா ஹோட்டல் ஏழு நட்சத்திர ஹோட்டல் நீங்கள் தனிப்பட்ட முறையில் வந்து தங்கிக் செல்லுங்கள்  எங்களுடைய மக்கள் சார்பிலே கொல்லப்பட்ட அடிக்கப்பட்ட மக்கள் சார்பில் யாரும் தன்னிச்சையாக எந்த ஒரு வெளிநாட்டு அமைப்பாக இருந்தால் என்ன அதே போல உள்நாட்டிலேயே இருக்கக்கூடிய ஒரு கட்சியாக ஒரு கூட்டணியாக இருந்தாலும் பேச முடியாது இதைத்தான் நாங்கள் தெட்டத்தெளிவாக சொல்லுகின்றோம். இதுகூட சர்வதேச மத்தியஸ்த்தத்தின் அடிப்படையில்தான்  பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமே ஒழிய அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கத்தை நம்பி ஏமார்வோமாக இருந்தால் எங்களை எங்கள் மக்கள் மாத்திரம் இல்ல ஆண்டவனும் எங்களைக் காப்பாற்ற மாட்டான். ஆகவே இதில் தெளிவாக இருக்க வேண்டும் நீங்கள் ஓடி ஓடி வந்து பேசுவீர்கள் சிங்கப்பூரில் நாடகம் ஆடுவீர்கள் உங்களுக்கு பிரயோசனம் இல்லை இங்கே அவர்கள் இருக்கின்ற பிரச்சனையை நீர்ந்துப்போக செய்கின்ற நிகழ்ச்சிநிரல் தான் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே சர்வதேச பொறிமுறையை நோக்கியதும் அதைப்போல இதற்கான நீதி கிடைப்பதும் எங்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் முன்னெடுக்க வேண்டும் முன்னேறிச் செல்ல வேண்டும் இதிலேயே உலகத்திலேயே இருக்கக்கூடிய அத்தனை புலம்பெயர் தமிழர்களையும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்தின் மக்களையும் நாங்கள் இன்று தாயகத்தில் இருக்கக்கூடிய மக்களையும் நாங்கள் மிகவும் பணிவாக கேட்க விரும்புவது தமிழீழத்தில் இருக்கக்கூடிய மக்களையும் நாங்கள் இவ்வளவு தூரம் கொல்லப்பட்டு எங்களுடைய மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் வீரமறவர்களும் தங்களுடைய இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தினுடைய இலங்கை ஜனாதிபதி இனப்படுகொலை குற்றவாளிகள் இலங்கை அரசோடு நாங்கள் நேரடியாக பேச செல்வது என்பது எங்களுடைய இங்கே இருக்கின்ற தலைமைகளாக இருக்கட்டும் வெளிநாட்டிலுள்ள பிரதிநிதிகளாக இருக்கட்டும் தற்கொலைக்கு சமம் அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் அவ்வாறு பேச செல்பவர்களை நாங்கள் துரோகிகளாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை நான் பகிரங்கமாக இந்த ஊடக சந்திப்பின் மூலம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் நன்றி வணக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published.