தியாக தீபம் திலீபனின் 34 வது ஆண்டு நினைவு நாள் சரியாக 10.48 மணிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் நினைவு தினம் 26.9.2021.இராணுவம் புலனாய்வுத்துறை பொலீசார் வீதிகளின் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
தியாக தீபம் திலீபனின் 34 வது ஆண்டு நினைவு நாள் 26 9 2021
*இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ,5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை ஈகம் செய்த மாவீரன் திலீபனுக்கு வீர வணக்கம்.
இதயபூர்வமான அஞ்சலி
1.இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக (GENOCIDE)
2.இன படுகொலைக்காக இலங்கை அரசைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தல் (INTERNATIONAL CRIMINAL COURT-ICC )
3.இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்து (NON RECURRENCE)
4.தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்காக ஈடு செய் நீதி (REMIDIAL JUSTICE) கிடைப்பதை உறுதி செய்தல் ,
5 ஈடு செய் நீதி மூலம் இலங்கையில் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு (REFERENDUM) ஒன்றை நடத்துதல்
மேட்படி ஐந்து அம்சங்களை நிறைவேற்றுமாறு
குவாட் (QUARD)அமைப்பை (அமெரிக்கா,இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட்ட) கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்! !
தமிழ்த் தேசியக் கட்சி
TAMIL NATIONAL PARTY