Search

அமரர் தங்கவேலாயுதம் அருளானந்தாசாமி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தின உலர் உணவு பொதிகள் (200000.00 ரூபா) வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது

அமரர் தங்கவேலாயுதம் அருளானந்தாசாமி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தின உலர் உணவு பொதிகள் (200000.00 ரூபா) வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது

புதுக்குடியிருப்பு சிவநகர், மல்லிகைத்தீவு,கைவேலி, தேராவில்,தொட்டியடி போன்ற இடங்களில் உள்ள 80 குடும்பங்களுக்கான உலர் உணவுகளை அருளானந்தசாமி அவர்களின் மகன் ரிஷி (வல்வை ரிஷி) அவர்கள் வழங்கி வைத்துள்ளார்.

இதே போன்று சில வாரங்கள் முன்னரான காலப்பகுதியிலும் (கொரோனா அதிகம் பரவிய காலப்பகுதியிலும்) வல்வெட்டித்துறை எல்லைப்புற கிராமங்களிலும் கிளிநொச்சி மாவட்டம் குரவேல் இன்னும் பல இடங்களிலும் 2 லட்சம் ரூபா பெறுமதியானதும் பின்னர் 1 இலட்சம் பெறுமதியானதும் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார்.

இவரைப் போன்று யாரும் முன்வந்தால் மட்டக்களப்பு அம்பாறை மன்னார் முல்லைத்தீவு பகுதிகளிலும் எமது மக்களுக்கு கரம் கொடுக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லலாம் நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *