Search

மயில்வாகன ம்நிமலராசன் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நாள் – 19.10.2021

மயில்வாகன ம்நிமலராசன் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நாள் – 19.10.2021

 

இவர் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார்.

தமிழீழ விடுதலை போராட்டத்தின் நியாயங்களையும் இனவாத அரசின் அநியாயங்களையும் ஊடக போராளிகளாக வெளி உலகுக்கு எழுத்துக்கள் மூலம் வெளிக்கொண்டு வந்து கொண்டிருந்த பல ஊடகவியலாளர்கள் இனவெறி அரசால் காலம் காலமாக இலங்கை தீவில் கொல்லப்பட்டு வந்துள்ளனர்.

அந்த வகையில் 2000 அக்டோபர் 19 அன்று, ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

சிங்கள அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவான ஈபிடிபி யினரால் படுகொலை செய்யப்பட்டார் என்றும் இவர்கள் பின்னணியில் இராணுவம் செயல்பட்டதாகவும் செய்திகளூடாக உறுதிப்படுத்தப்பட்டது..

போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார் என்பது அரசுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

அவற்றுள் பிபிசியின் தமிழ், சிங்கள சேவைகளும், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு என்பன முக்கியமானவையாகும். இவற்றுக்கு செய்திகள் வழங்கி கொண்டிருந்த நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் இருந்து நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த வெகு சிலரில் ஒருவராவார்.

சம்பவ நாள் அன்று கொலையாளிகள் அரியாலையில் அவரது வீட்டின் யன்னல் ஊடாக துப்பாக்கியால் சுட்டனர்.

அன்றைய நாளில் நிமலராஜன் தான் எழுதிக் கொண்டிருந்த தனது இறுதிக் கட்டுரை மேலே வீழ்ந்து குருதி சிந்தி அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.

கொலையாளிகள் அத்தோடு நிற்காமல் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேறும் போது கைகுண்டு ஒன்றை வீட்டுக்குள் வீசி விட்டு சென்றனர்.

இத்தாக்குதல் யாழ்ப்பாண நகர மத்தியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் இராணுவ ஊரடங்கு சட்டம் இயங்கும் வேளையில் நடைபெற்றது. அதாவது இராணுவத்தின் அனுசரணை இன்றி நடந்திருக்க முடியாது என்பதும் இந்த தாக்குதலின் பின்னணியில் இராணுவமே இருந்தது என்பதும் புலனாகின்றது.

இத்தாக்குதலில் மயில்வாகனத்தின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் (65), தாய் லில்லி மயில்வாகனம் (62), மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா (11) ஆகியோரும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேனாவின் மையும் ஊடகவியலாளர் நிமலராஜனின் குருதியும் ஒன்றாக கலந்து சிங்கள பேரினவாத வெறியாட்ட படுகொலைகளுக்கு இன்னுமொரு சான்றாக அவரின் உயிர் விதைப்பு வரலாறானது.

ஆனால் ஊடகவியலாளனை கொல்வதால் அவனது எழுத்துக்களை நிறுத்தி விடலாம் என கனவு காணும் பேரினவாத அரச வெறியர்களுக்கு ஒன்று புரியவில்லை. ஊடகவியலாளர்களின் உயிர் மையில் இருந்து பல்லாயிரம் எழுத்துக்களாக பல ஊடகவியலாளர்கள் உருவாவார்கள் என்பதும் ஊடக போராளி இறந்தாலும் வரலாற்றில் தொடர்ந்தும் போராடுவான் என்பதும்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *