வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடியை சேர்ந்த இருவரே இந்திய கடலில் கைது 23.10.2021

வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடியை சேர்ந்த இருவரே இந்திய கடலில் கைது  23.10.2021

வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடியை சேர்ந்த இருவரே இந்திய கடலில் கைது
23.10.2021

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியிருக்கின்றது.

நேற்றய தினம் (22.10.2021) இரவு இரு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் இந்தியக் கடற்படையினர் நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.