வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதி 751 திக்கம் பாலத்திற்கு அண்மித்த பகுதியில் கடலலை உள்வாங்கியதால் தடுப்பணை உடைந்து வீதியில் உள்ள மண்சரிவு ஏற்பட்டு கற்களால் அரைவாசி வீதி மறிக்கப்பட்டுள்ளது எனவே பாதசாரிகள், சாரதிகள் கவனத்தில் கொள்ளவும்.
இவ்வீதி பருத்தித்துறைக்கு அண்பித்த பகுதியில் அதாவது மெதடிஸ் பாடசாலைக்கு முன்பாகவும் சென்றவுடன் வருடங்களில் கடலலை உள்வாங்கி இருந்தது.
இதே போன்று பல இடங்களிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இப் பாதிப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக சுனாமி ஏற்பட்ட காலம் தொடக்கம், மாறி மாறி வந்த கடல் துறை அமைச்சினால் சுனாமியின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட முருகைக் கற்பாறைகள் மீண்டும் அந்த அதே இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க தவறியதாலும் புதிய கற்களை அத்துடன் இனைத்து ஒரு தொடர் ஆணை ஒன்றை ஏற்படுத்து தவறியாமையினாலும் இப்பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.
அத்தோடு இதில் இருக்கின்ற அணை பகுதி மிகவும் நீண்ட பழமையான அணையாகும் காணப்படுகின்றது.
இவ்வீதி எம் இவ்வணையும் மிகவும் நீண்டகாலமாகவே புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகின்றமையே
இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
மக்கள் மிக நீண்ட காலமான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.