அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா

கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.

வடகொரியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்காவும், ஐ.நா. சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தென் கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்க இராணுவம் போர் பயிற்சியை இந்த வாரம் நடத்தியது. இதற்கு வட கொரியாவும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனையடுத்து நேற்று 3 நடுத்தர ஏவுகணைகளை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை செய்தது.

இதனை உறுதிபடுத்தியுள்ள தென் கொரியா வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனைகள் செய்து தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வருவதை வடகொரியா கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *