கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் – இலங்கை

கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் – இலங்கை
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.