பெருந்திரளான மக்கள் தீப்பிழம்பான உணர்ச்சிகளுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த தீருவிலில் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள் . 27.11.2021 மேலதிக புகைப்படங்களுடன் பகுதி-2

பெருந்திரளான மக்கள் தீப்பிழம்பான உணர்ச்சிகளுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த தீருவிலில் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள் . 27.11.2021 மேலதிக புகைப்படங்களுடன் பகுதி-2

தாயக மண்ணை காத்த தம்முயிர் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர் தெய்வங்களுக்கும் பன்னிரு வேங்கைகளின் தீருவில் அஞ்சலி செலுத்தப்பட்டது

முதல் மாவீரர் லெப்டினன் சங்கர் அண்ணா வீரகாவியமான அதே தினத்திலே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுகிறது.

வல்வெட்டித்துறை மாவீரர்நாள் மணி ஓசையுடன் மாவீரர் கீதம் ஒலிக்க பிரதான ஈகை சுடரினை பெண் மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைக்க ஏனைய இரண்டு தீபங்களை மாவீரர்களின் சகோதரிகள் ஏற்றி வைத்தார்கள் அதனைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களும் தீபச்சுடரினை ஏற்றிவைக்க வல்வை தீருவில் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தூபியின் எல்லையில் நின்ற மக்களும் தீபங்களை ஏற்றி வைத்தார்கள்
அதனைத் தொடர்ந்து ஐந்து பேர் பத்து பத்து பேராக பிரதான ஈகைச்சுடருக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார்கள்.

வல்வை நகர் இராணுவத்தினராலும் புலனாய்வுப்பிரிவினராலும் சூழ்ந்த நிலையில் வல்வை எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை அம்மன் கோவில் அருகில் இருந்து ரேவடிக்கடற்கரையில் தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்த வந்த போது இராணுவத்தினர் மறித்தமையினால் இராவணுத்திருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு பின்னர் வல்வை ரேவடி கடற்கரை ஊடாக வல்வெட்டித்துறை சந்தி வந்து சந்தியின் ஊடாக வல்வை வைத்தீஸ்வர சிவபுர வீதி வழியாக திருவிலை வந்தடைந்தது.

பெருந்திரளான மக்கள் தீப்பிழம்பான உணர்ச்சிகளுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த தீருவிலில் திரண்டிருக்கின்றனர்.
இராணுவத்தின் கெடுபிடிகளைத் தாண்டி வல்வை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் தலைமையில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களும் கலந்து தீபச்சுடரினை ஏற்றிவைத்தார்

விளக்கேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான மக்களும் , அதைவிடக்கூடிய மக்கள் விளையாட்டுத்திடலிலும் வீதியோரங்களில் திரண்டு நின்று பெருந்திரளாக காணப்பட்டனர்.

மற்றும் வேலன் சுவாமி அவர்களும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் அவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களும் ஈகச்சுடர் ஏற்றி வைத்தார்கள்.

இவை அனைத்தும் நாட்டில் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று நோய் விதிகளுக்கு அமைவாக மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு அதிகளவான இராணுவமும், பொலிஸாரும் நிலைமைகளை அவதானித்தபடி நின்றிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.