20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் 18 வயதான ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.
தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று ஈஷா குறிப்பிட்டுள்ளார்
சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.
இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.