சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

வல்வெட்டித்துறையிலும் உயிரிழப்புகளுடன் பல கோடி சொத்துக்கள் அழிவடைந்தது.

பொலிகண்டி, தொண்டைமானாறு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை,தமிழர் தாயக பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

2004 டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் காரணமாக 2 லட்சத்து 82 ஆயிரம் பேர்வரை உயிரிழந்ததுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.