வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகம் uk,வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் கனடா புலம்பெயர் வாழ்வை 79 நண்பர்கள் அமைப்பு கண்டன அறிக்கை
கண்டனக் குரல் !!!
நிறுத்துங்கள் நிறுத்துங்கள் பகைவன் கால் பணிந்து பாய் விரிப்பதை நிறுத் துங்கள்
அன்புச் சொந்தங்களே பட்டங்கள் பறக்கின்றன வல்வெட்டித்துறை விண்ணில் பார்வைக்கு அழகு இதனால் இல்லை உயர்வு, பட்டமும் பதவியும் விருதுகளும் படித்துப் பெற்றால்தான் வாழ்வுக்கு இனிது
தேடலில் பெற்ற உரிமையும் போரில் பெற்ற தேசமும் ஊனமாய் கிடக்கிறது
யாராலே, வேர் அறுந்த வாழ்விலே வான்னுயர் பட்டம் விட்டு போட்டிக்கு தலமை தாங்க பகைவன் கால் பணிந்து மலர் தூவி மாலை இட்டு உன் உறவுகளின் பிணங்களில் நடக்கவிட்டு நலிந்து வீழ்வதை நிறுத்துங்கள்
உயர்வுக்கு உள்ளன்பு சொரிந்து தன்னையே தந்த தலைவன் பிறந்த மண்ணில் ஈனம் விளைத்தல் முறையோ மானச் சேலை இல்லையோ முள் வேலிக்குள் இன்னும்தான் வாழ்க்கை அவமானப் பட்டம் ஏற்றி அடிமை ஆகாதீர்கள்
அற்ப சொற்ப ஆசைக்காகவும் அவரவர் ஒழுங்கைக்கு விளக்கிற்காகவும் விட்டிலாய் வீழ்கின்றீர் வீரம் என்னாவது. உதய சூரியனுக்கே இது அவமானம் மானம் விற்று பறக்க விடல்லாமா பறக்கும் பட்டம்
நிறுத்துங்கள் நிறுத்துங்கள் பகைவனை அழைத்து பரிசம் போடுவதை நிறுத்துங்கள், அவமானம் அவமானம் வல்வெட்டித்துறைக்கே இது அவமானம் பட்டம் ஏற்றுங்கள் போட்டித் திறன் வெல்லுங்கள் சுற்றமும் முற்றமும் இனிதுற வாழ உரிமைக் கொடி ஏற்றுங்கள். நேற்று இன்றா எங்கள் மண்ணில் பட்டம் ஏற்றுகிறோம் மூதாதையரின் காலத்தில் இருந்தே எதிலும் எத்திறணிலும் பட்டம் ஏற்றுதலிலும் பல பரிணாமம் கண்டவர் நாங்கள். இழி நிலை வீழ்ந்ததில்லை இப்படி
பட்டம் ஏற்றுங்கள் பட்டம் ஏற்றுங்கள் பவுசுக்காக பகட்டுக்காக ஊரின் உயிரை கொல்லாதீர்கள், உயிர் ஈர்ந்த உறவுகளை நினைந்து உயருங்கள்.
தோழமை நட்புடன் – தொண்டமனாறு நற்பணி மன்றக் கிளைகள் – லண்டன், கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா, நோர்வே, பிரான்ஸ், டென்மார்க்.