தற்பாதுகாப்பு நோக்கில் வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். மிக மோசமான பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ஆள் இல்லா விமானங்களின் மூலமாகவும், யுத்த விமானங்களின் மூலமாகவும் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நான்கு அமெரிக்கர்கள் மீது வான் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அமெரிக்கர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குவந்தனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




















Leave a Reply