மரண அறிவித்தல்- மார்சலீன்பிள்ளை தோமஸ் சுபேந்திரன்

மார்சலீன்பிள்ளை தோமஸ் சுபேந்திரன்
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , தெணியம்பையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்சலின்பிள்ளை தோமஸ் சுபேந்திரன் அவர்கள் 17.02.2022 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாடக மாமணி சாமிநாதபிள்ளை மார்சலீன் பிள்ளை (செல்வராஜா மாஸ்ரர்) மாரிமுத்து ஆகியோரின் அன்பு மகனும். மருமலர் இராஜேஸ்வரி (ஓய்வுநிலை ஆசிரியை – யா/புனித பத்திரிசியார் கல்லூரி) லூர்துமலர் ஞானேஸ்வரி (ஒய்வு நிலை உப அதிபர் யா/சிதம்பரக் கல்லூரி) அன்னைமலர் அமலேஸ்வரி (ஓய்வுநிலை ஆசிரியை -யா/உடுப்பிட்டி மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ருத்திரகுமாரன், செல்வரட்ணம் (அவுஸ்ரேலியா) யோகீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் சித்திரா (நியூசிலாந்து) ராஜன் (கனடா) லூபன், காலஞ்சென்ற றோகன் , மற்றும் வினிதா, காலஞ்சென்ற தங்கா மற்றும் ரவின் , கிரிதரன் (நியுசிலாந்து) யூட்சி (கனடா) சௌதாமினி (மாநகரசபை – யாழ்ப்பாணம்) டினோஷா (ஆசிரியை – யா/சுண்டுக்குளி மகளீர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். அஸ்விகன் (நியுசிலாந்து), அனோஸ்கன் (நியுசிலாந்து), அஷ்விதா (நியுசிலாந்து), ரேணுகா (கனடா), ருவான்சன் (கனடா) அபிஸ் குமரன் (கனடா) யதுரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார் அன்னாரின் இரங்கல் திருப்பலி 19.02.2022 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் தகவல் குடும்பத்தினர்