வல்வையை சேர்ந்த குட்டிச்சாமிஅண்ணா அவர்களும் அவரின் நண்பர்களும் லண்டனில் தமிழர்கள்கூடும் நிகழ்வுகளில்எல்லாம் கச்சான்,சோளம்பொரி(popcorn) போன்றவற்றை விற்பனைசெய்து அதன்மூலம் பெறப்படும் நிதியை வன்னியில் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்படும் எமது மக்களுக்கு கடந்த இரண்டுவருடங்களுக்கும் மேலாக வழங்கிவருகின்றார்கள்.
உதவி வழங்கவேண்டிய எமதுமக்களின் எண்ணிக்கையும்,உதவி தேவைப்படும் எமது உறவுகளின் தொகையும் நாளுக்கு நாளுக்கு அதிகரித்தே செல்வதால் அத்தியாவசியஉதவிகள் செய்யவேண்டிய கடமையும் எமக்கு அதிகரித்தே செயல்கிறது.
அதற்கான ஒரு முன்னெடுப்பாகவே,அதற்கான நிதிதிரட்டுவதற்காகவே இந்த மாபெரும் கலைச்சோலை
நடாத்தப்படுகின்றது.
அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்து எமக்கு ஆதரவுதரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தொடர்புகட்கு: 07983600913 – குட்டிச்சாமி அண்ணா
07404043509 – ராஜம்மான். (ராஜசிங்கம்)