முழு அளவிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிதி, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 13ம் திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி ஓர் சிங்கள பேரினவாத கட்சி எனவும், அதன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென ஜாதிக ஹெல உறுமய அண்மையில் தெரிவித்திருந்தது. எனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.