ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்டத்திலோ அதிகாரிகள் மட்டத்திலோ எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மட்டும் உயர் அதிகாரி கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதரக அதிகாரிகளும் இந்த கூட்டத்தொடர்பில் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர்.