கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 சிறப்புடன் நடைபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) இன்று மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ள நிகழ்வில் திருமதி.துகாரதி ஞானச்சந்திரன் (ஆசிரியர், யா/தொண்டைமாணாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலைநிகழ்வுகள், சிறப்புரைகள்,கௌரவிப்பு, நாடகம் என சிறப்புற நடைபெற்றுள்ளது.