வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)!ஆண்டறிக்கை 2011 – 2012
…………………………………………………………………..
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும,; கடந்த ஆண்டு எமக்கு இந்தச்சந்தர்ப்பத்தை வழங்கியதற்காகவும் முதற்கண் மனமார்ந்த நன்றியை எனது சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
“முயற்சி திருவினையாக்கும்” முயன்று பார்க்காதவரை வெற்றி தோல்வியை நிர்ணகிக்க முடியாது என்ற கோட்பாட்டிற்கமைய எமது நிர்வாகம் இந்த குறுகிய காலகட்டத்தில் கடுமையான முயற்சி செய்து பல அரிய செயல்களை புரிந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும.; இம்முயற்சிக்கு துணையாக இருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேற்படி வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக் கூட்டம் 08.05.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை இலண்டன் மிச்சம் பகுதியில் உள்ள வல்வை அரங்கத்தில் மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பமாகியது. தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளரினால் சென்ற கூட்ட அறிக்கையும், ஆண்டறிக்கையும,; பொருளாளரினால் வருடாந்த கணக்றிக்கையும் சமரக்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம் பெற்றது.
புதிய நிர்வாக சபையின் தலைவராக:- திரு.ந. மணிவண்ணன். உப தலைவராக- திரு. சு. இராஜசிங்கம். செயலாளராக:- திரு. பா. ஞானச்சந்திரன். உப செயலாளராக:- திரு. க. சதானந்தவேல். பொருளாளராக:- திரு. இ. குகதாஸ். மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு. ஈ. துரைலிங்கம் திரு:- திரு. த. அற்புதசிகாமணி. திரு. கு. பிறேம்குமார். திரு. மு. பிறேம்பாபு. திரு. அ. நவஜீவன். திரு. பா. சிவகணேஸ். திரு. அ. பார்த்திபன். திரு. ச. லவதீபன். ஆகிய அனைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு கூட்டம் இனிதே நிறைவேறியது.
எமது நிர்வாகம் பதவி வகித்த ஒன்பது மாதங்களில் ஒன்பது நிர்வாக சபைக் கூட்டங்களையும் ஒரு அவசர பொதுக் கூட்டத்தையும் இனிதே நடத்தி இருக்கின்றது. அத்தோடு தாயக மண்மீட்புப் போரில் தம்முயிரை ஈகம் செய்த மாவீரன் ஈழத்துக்காந்தி லெப் -கேணல் திலீபன் உட்பட ஒக்டோபர் மாதம் மாவீரராகிய அனைவருக்குமாக ஒரு நினைவஞ்கலிக் கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு. சிவத்தம்பி அவர்கள் மறைவையொட்டி அன்னாருக்கு ஒரு அஞசலிக்கூட்டத்தையும் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தோம். குறிப்பாக அவரிடம் பல்கலைக் கழகத்தில் கல்விகற்ற பல மாணவர்கள் அந்த அங்சலிக் கூட்டத்தில் கலந்து இரங்கலுரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக எமது நிர்வாகம் பதவியேற்ற குறுகிய நாட்களில் மிகவும் ஒரு பிரமாண்டமான கோடைவிழாவை 26.07.2011ல் நடாத்தி முடித்தது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். அந்த விழாவிற்காக நிர்வாகத்தினர் மட்டுமல்லாது பலரும் மிகவும் கடுமையாக உழைத்து விழாவை வெற்றியடையச் செய்தது அனைத்து வல்வையர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும். குறிப்பாக விழாவினை எந்தவொரு அசம்பாவிதங்களும் இல்லாமல் நடாத்தி முடிப்பதற்கு உதவியாக இருந்த பிரித்தானிய காவல்த்துறைக்கும் பொது மக்களுக்கும் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்ததாக ஈழத்திமிழர்களின் அவலங்களை மையமாகக் கொண்டு ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் தொப்பிழ்க்கொடி உறவுகளான தாய்த்தமிழக முன்னணிக் கலைஞர்களின் பேராதரவுடன் தயாரிக்கப்பட்ட “உச்சிதனை முகர்ந்தால்” என்ற திரைக்காவியத்தின் இறுவெட்டு வெளியீட்டை இலண்டன் மாநகரத்தில் நடாத்துவதற்கு எமது சங்கத்தின் ஆதரவை விழா அமைப்பாளர்கள் நாடிவந்தார்கள். எமது சங்கமும் முழுமனதுடன் மிகவும் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு உதவியாக இருந்தது. இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் வல்வை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.
இந்த நிர்வாகத்தால் நடாத்தப்பட்ட குளிர்கால ஒன்று கூடல் “அலைஓசை” நிகழ்ச்சியில் வல்வை பு@ஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐஇ) மெய்வல்லுனர் போட்டியில் (2010,2011) ஆண்டுகளில் பங்குபற்றி சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வல்வை பு@ஸ் விளையாட்டுக் கழகத்தின் பொன்விழா மலர் வெளியீடும் திறம்பட நடாத்துவதற்கு சங்கத்திலானான உதவியை வழங்கியிருந்தோம். அத்துடன் மலர்க்குழுவிற்கு £1500.00 அன்பளிப்பாகக் கொடுத்திருந்தோம். அடுத்து வல்வையர்களின் வாரிசுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் கல்வியிலும் மற்றும் பலதுறை சார்ந்து பல சாதனைகளைப்படைத்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும் அந்த வகையில் தமிழ், 11+இ புஊளுநுஇ யுளுஇல் திறமைச் சித்தியடைந்தவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள், அத்தோடு நீச்சலில் தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த ஊக்குவிப்பானது கடந்த மூன்று ஆண்டுகளாக எமது வல்வை நலன்புரிச் சங்கத்தினால் திறம்பட செயற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் நிர்வாகங்களும் இப்பணியை தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இவ்விழாவில் வல்வை வாரிசுகளுடன் அவர்களின் சகமாணவ மாணவிகளும் இணைந்து சிறந்த பல கலை நிகழ்ச்சிகளை வழங்கியது சிறப்பு அம்சமாகும். அத்தனை நிகழ்ச்சிகளையம் திறம்பட பயிற்றுவித்த அனைத்த ஆசிரியர்களுக்கும் மனமுவந்து பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வல்வை நலன்புரிச் சங்கமானது (ஐஇ) கடந்த சில ஆண்டுகளாக செய்துவந்த நலத்திட்டங்கள் அனைத்தும்(மாதாந்த வாழ்வாதரக் கொடுப்பனவு) எமது நிர்வாகத்தினால் தொடர்ந்தும் செவ்வனே செய்யப்பட்டு வந்தது( இத்திட்டத்திற்கு திரு.பா.சிவகணேஸ் £ 200.00 திரு.N.இரத்தினசிகாமணி £25.00) பவுண்ட்களும் உதவிவழங்கியது குறிப்பிடத்தக்கது அத்தோடு முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக பூரணம் முதியோர் உதவித்திட்டம் மூலம் இலங்கைப்பணம் தலா 1000.00 ரூபா வீதம் இருபத்தியைந்து முதியர்களுக்கும் (2010 ய+லை முதல்) அடுத்து மரணச்சடங்கு செலவிற்காக தலா 10000.00 ரூபா வீதம் இதுவரை மூன்று கொடுப்பனவுகளையும் திரு.இ.தெய்வேந்திரன் அவர்கள் வல்வை நலன்புரிச்சங்கம் (ஐஇ) ஊடாக வல்வை ஒன்றியத்தின் மூலம்(வல்வை) ஆற்றிவருவது பெருமைப்படக்கூடிய விடயமாகும். புதிதாக மேலும் நான்கு குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக தலா 5000.00 ரூபா வீதம் வழங்ப்பட்டு வருவதுடன் பதின்நான்கு குடும்பங்களுக்கு வாழ்வாதார சுயதொழில் முயற்சிக் கொடுப்பனவாக 1,78,100.00 ரூபாவும் வல்வை ஒன்றியத்தினூடாக (வல்வை) வழங்கப்பட்டுள்ளது.எமது ஊரைச்சேர்ந்த திரு.ளு.உதயகுமாரின் மகன் ஜோன் அவர்களின் இதய அறுவைச்சிகிற்சைக்காக இந்திய ரூபா 1,00000.00 (ஒரு இலட்சம்) வைத்திய சாலையில் நேரடியாக செலுத்தப்பட்டது. (இப்பணத்தில் £ 782.00ஐ சங்கமும், £ 450.00ஐ நிர்வாக அங்கத்தவர்களும் வழங்கினார்கள்) வல்வை நலன்புரிச் சங்கமானது ழேளெரஉh ர்iபா ளுஉhழழட மாணவிகளின் ஊhயசவைல நிகழ்வுக்காக £ 300.00ஐ அன்பளிப்பாக கொடுத்து உதவியிருந்தோம்.
கடந்த ஆண்டு முந்தய நிர்வாகத்தால் வல்வை நலன்புரிச் சங்கத்திற்கென (ஐஇ) ஒரு இணயத்தளம் ஒன்று ஆரம்பிக்ப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருவது யாவரும் அறிந்த விடயமாகும் எமது நிர்வாகம் அதற்காக ஒரு டுயிவழி ஒன்றும் மற்றும் கட்டணப்பணமும் சேர்த்து £ 950.42ஐ அதன் வளர்ச்சிக்கு உதவியிருந்தோம்.
இன்றய உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இனிவரும் காலங்களில் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு குறிப்ப்pட்ட வல்வை மக்களிடமே தொடர்ந்தும் பணஉதவிகளை கோர முடியாத சூழ்நிலையில் நிலையான வருமானம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது £ 20இ000.00ஐ சங்கமானது முதலீடு செய்துள்ளது ஒரு எடுத்துக்காட்டான விடயமாகும். இனிவரும் நிர்வாகங்களும் இம்முதலீட்டை பெருக்குவதன் மூலம் எமது சங்கத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யலாம்.
அன்பான உறவுகளே, இனிவரும் நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தையாவது ஒதுக்கக் கூடியவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் ஊரின்பால் அக்கறை கொண்டவர்களும் தேசப்பற்றுள்ளவர்களும் வல்வையின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் ஒரு பரந்த நிர்வாகமாக அமைய வேண்டுமென்ற சிந்தனை கொண்டவர்களும் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்களும் வரவேண்டும். இதுவே ஒரு பலமான வல்வை சமுதாயத்தை புலம்பெயர் நாட்டில் உருவாக்க உற்ற துணையாக அமையும்.
நன்றி
செயலாளர்.
பா.ஞானச்சந்திரன்