Search

இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி மாபெரும் எழுச்சி பேரணி வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து ஆரம்பமாகிய ஒளிப்பதிவுகள்

இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி மாபெரும் எழுச்சி பேரணி வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து ஆரம்பமாகியது.

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர், வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தையும் வணங்கி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பிறந்த வீடான ஆலடி ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது வீட்டின் மண் மீது விழுந்து வணங்கி பேரணியானது ஆரம்பமாகியது.

அங்கிருந்து பேரணியானது ஆரம்பமாகி வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் வந்தடைந்து அங்கு சமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மே 18 கட்சியானது அனைவருக்கும் வழங்கப்பட்டு அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தியை நோக்கி வந்தடைந்த பின்னர் ஊர்தி பேரணியானது ஊரணி வரை சென்றடைந்தது ஊரணியில் நடைபவனி பேரணி ஆரம்பமாகியது பின்னர் ஊர்தி பேரணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிகண்டி சந்தியில் நடைபவனி ஆரம்பமாகி ஆலடி சந்தியில் நிறைவடைந்து பின்னர் பருத்தித்துறை சந்தியில் ஆரம்பமாகி டிப்போ சந்தியில் நிறைவடைந்த பின்னர் நெல்லியடி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகி கரவெட்டி கிழக்கு வரை நடை பேரணி சென்று அங்கிருந்து பேருந்து பேரணி நல்லூரை நோக்கி பேரணி சென்றிருக்கின்றன.