யாழ்ப்பாண சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை குடியேற்றி சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச திருத்தச் சட்டம் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லைஎ எனவும், எதிர்வரும் 6ம் திகதி அவசர சட்டமாக இது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1983ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை பதிவு செய்யும் போர்வையில் தற்காலிக அடிப்படையில் யாழ்பாணத்திற்குள் பிரவேசித்தவர்களை நிரந்தரப் பிரஜைகளாக பதிவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.