Search

வல்வை ஒற்றுமை வி.க கரப்பாந்தாட்ட(Over game )கிண்ணத்தை தட்டிச்சென்றது றெயின்போ அணி (Setup game )கிண்ணத்தை தட்டிச்சென்றது நேதாஜி அணி

வல்வை ஒற்றுமை வி.க கரப்பாந்தாட்ட(Over game )கிண்ணத்தை தட்டிச்சென்றது றெயின்போ அணி (Setup game )கிண்ணத்தை தட்டிச்சென்றது நேதாஜி அணி

வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்டபட்ட
கழகங்களுக்கு நடாத்தும் கரப்பாந்தாட்ட (Over game ) (Setup game )சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று வல்வை விளையாட்டு அரங்கம் (புட்சால்) மைதானத்தில் இடம்பெற்றது

அந்த வகையில் (over game ) ஆட்டத்தில் றெயின்போ அணியை எதிர்த்து வல்வை ஒற்றுமை அணி போட்டியிட்டது மிகவும் சிறப்பாக இடம் பெற்ற இப்போட்டியில்
றெயின்போ அணி வெற்றிப்பெற்று வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் சென்றது

இத்தொடரின் சிறந்த ஆட்டநாயகனாக மதன் அவர்களும் தொடர் ஆட்டநாயகனாக பிறேம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்!

இதே வேளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரைக்கும்
நேரத்தியாக செயற்பட்ட வல்வை ஒற்றுமை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.

(Setup game )கிண்ணத்தை தட்டிச்சென்றது நேதாஜி அணி !

கரப்பந்தாட்டம் (setup game ) ஆட்டத்தில் நேதாஜி அணியை எதிர்த்து வல்வை ஒற்றுமை அணி போட்டியிட்டது மிகவும் சிறப்பாக
இடம் பெற்ற இப்போட்டியில்
நேதாஜி அணி வெற்றிப்பெற்று வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் சென்றது.

இதே வேளை போட்டியின் ஆட்ட நாயகனாக தினேஷ் அவர்களும் தொடராட்ட நாயகனாக
பிரகதீஸ் அவர்களும் தெரிவுசெய்யப்ட்டு
கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்!

இதே வேளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரைக்கும்
நேரத்தியாக செயற்பட்ட வல்வை ஒற்றுமை அணி இரண்டாமிடத்தை தட்டிச்சென்றது.