ஆழிக்குமரன் ஆனந்தன்
25-05.1943ல் பிறந்த இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று அத்துறையில் தொழில் தேடுவதை விடுத்து சாதனைகள் புரிந்து “கின்னஸ்” புத்தகத்தில் தனது பெயர் இடம்பெறுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். இவர் ஈட்டிய உலக சாதனைகள்.
(01)*** 20-03-1963 — 22-03.1963 வல்வெட்டித்துறையிலிருந்து கோடிக்கரைக்கு பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தது. கடந்த தூரம் 38 மைல். எடுத்த நேரம் 42 மணி.
(02)*** 1975 ஏப்ரல் மாதம் 18 – 20 தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடி நீந்திச்சென்று நீந்தியே திரும்பி வந்தது. கடந்த தூரம் 40 மைல்
(03)*** 01-01-1979 காலி முகத்திடலில் தொடர்ச்சியாக டுவிஸ்ட் டான்ஸ் (Twist danse) 180 மணித்தியாலம் இச்சாதனை இடம்பெற்ற சமயம் இலங்கை குடியரசுத்தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா நேரில் சென்று பாராட்டினார்.
(04)*** 1979 மே மாதம் 02-05-1979 தொடக்கம் 10-051979 வரை 187 மணி 28 நிமிடம் இடைவிடாது 1487 மைல்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்கவைச்சுற்றி சைக்கிள் ஓடியது
(05)*** 26-12-1979 தொடக்கம் 01-01-1979 வரை 136 மணி நேரம்”போல்பஞ்சிங்”
(06)*** 15-05-1980 இரு நிமிட நேரத்தில் 165 தடவை இருந்து எழும்பியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக
(07)*** 15-05-1980 தொடக்கம் 17 வரை ஒற்றைக்காலில் 33 மணி நேரம் நின்று கொழும்பில் உலக சாதனை
(08)*** 31-12-1980 – 01-12-1980 High Kicks என்ற உலக சாதனை. கொழும்பு காலி முகத்திடலில் 6 மணி 51 நிமிடத்தில் 9100 தடவை
(09)*** 30-06-1981 ல் தொடர்ச்சியாக 80 மணி நேரம் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தண்ணீரில் மிதந்து சாதனை.
(10)*** ஆகஸ்ட் 1982 296 மைல்களை 159 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடந்து சாதனை.
(11)*** 31-12-1982ல் 22 அவுன்ஸ் நிறையுள்ள பிலியட்ஸ் தடியை ஒற்றைக் கையினால் 2520 தடவைகள் மேலும் கீழுமாக உயர்த்தியது 2 மணி 29 நிமிடங்களில் யாழ் மண்ணில் கடைசியாக நிகழ்த்திய சாதனை.
*** மேலே குறிப்பிட்டவற்றுள் (01) (03) (10) (11) தவிர்ந்த ஏனைய 7 சாதனைகளும் “கின்னஸ்” புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
“ஆழிக்குமரன் ஆனந்தனால்” மேற்கொள்ளப்பட இதர சாதனைகள்.
(அ) 1978ல் டுவிஸ்ட் நடனம் 128 மணி நேரம்.
(ஆ) 1980ல் 70 இறாத்தல் எடையுள்ள இரும்பை 26 நிமிடம் 10 செக்கனில் 2000 தடவை கீழிருந்து மேலே தூக்கியது.
***இறுதியாக ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனையை மேற்கொள்வதற்காக 1984 ஆகஸ்டில் அதே கால்வாயில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவிக்கொண்டார். சாதனையே வாழ்க்கையாகி சாதனையிலே உயிரைவிட்ட வல்வெட்டித்துறை “ஆழிக்குமரன் ஆனந்தனின்” 70 வது பிறந்த தினம் இன்றாகும்(25-051943 — 25-05-2013).
–நன்றி:- வரலாற்றில் வல்வெட்டித்துறை .