கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்து Sky+, Sky Go போன்ற அப்பிளிக்கேஷன்கள் சிரியாவைச் சேர்ந்த தாக்களார்களினால் (Hackers) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக Sky நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது Google Play Store தளத்திலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ள போதிலும் முன்னர் தரவிறக்கம் செய்து பாவிக்கும் பயனர்கள் தமது சாதனத்திலிருந்து குறித்த அப்பிளிக்கேஷன்களை நீக்க தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை ஹேக் செய்தவர்கள் Syrian Electronic Army என தம்மை அறிமுகப்படுத்தியுள்ளதோடு ”Syrian Electronic Army was here” எனும் செய்தியையும் விட்டுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.