காலிஃப்ளவரில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கியுள்ளது.
காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது.
மேலும் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும்.
நச்சுத் தன்மை நீக்கும்
காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது.
இதய நோய்களுக்கு எதிரானவை
ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது.
இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.
செரிமானத்தை அதிகரிக்க
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது.
நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, செரிமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க
காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.
எடையைக் குறைக்க
குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று.
ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.