கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ் விளையாட்டுப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக செல்வி இராட்சியலட்சுமி சுப்பிரமணிக்குருக்கள் (அதிபர், யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்), சிறப்பு விருந்தினர்களாக திரு.சி. தவனேஸ்வரன் ( கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J / 393), செல்வி அமிர்தராணி இரத்தினவடிவேல் ( உள்ளுராட்சி ய்தவியாளர், வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள் .