சீனத் துவக்கு கொண்டு சிதறடிச்சாங்கள் பாழாய்ப்போவார்!
நாகர்கோவில் பாடசாலை மீது 1995:09:22 அன்று நண்பகல் 12:10 மணியளவில் புக்காரா குண்டு வீசி 22 மாணவர்கள் உட்பட 36 பேரை படுகொலை செய்த 27ம் ஆண்டு நினைவேந்தல்.
இதன் போது குறித்த பாடசாலையில் பல காலமாக சிற்றுண்டி விற்பனைசெய்து வரும் மூதாட்டி இவ்வாறு ஒப்பாரி வைத்தழுதார்.
ஆச்சி, ஆச்சி எண்டு ஓடி வந்து கச்சான் , ரொபியள் வாங்கிப் போன குஞ்சுகளை சீனத் துவக்கு கொண்டு சிதறடிச்சாங்கள் பாழாய்ப்போவார்.