வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட தொடரின் முதலாவது போட்டிகள் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது .
முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரவெட்டி நவசத்தி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 3: 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது. வல்வை அணி சார்பில் ரசிகரன் 2 கோல்களையும், சண்முகதாஸ் 1 கோல்களையும் அடித்தனர். வல்வை அணியின் புதிய உதைபந்தாட்ட சீருடை இன்றைய போட்டியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த உதைபந்தாட்ட சீருடையை வல்வை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினரான திரு . பா. கார்த்திகேயன் (அவுஸ்திரேலியா ) அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இரண்டாவது போட்டியில் வல்வை ஆதிசத்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் 4 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் நவசக்தி விளையாட்டுக்கழகம்