Search

புத்தக வாசித்தலை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம்

29-09-2022 புத்தக வாசித்தலை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் ஆங்கிலத்தில் ஒரு சொற்தொடர் உண்டு . ” Readers are Leaders ” . Leaders என்று சொல்லும்போது அரசியல் தலைவர்களை மாத்திரம் சொல்லவில்லை . குடும்பத்தலைமை உட்பட வேலை பார்க்கும் இடங்களிலும் சமூக புத்தக வாழ்க்கையிலும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு வாசித்தல் என்பது பெரிய முக்கிய பங்காற்றுகிறது . படங்கள் , TV , Videos பார்ப்பதும் ஓரளவிற்கு உதவினாலும் புத்தகங்கள் வாசிப்பது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது . எம்மை அதிகம் சிந்திக்கவிடாமல் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் . ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை . நின்று நிதானித்து ஆறுதலாக வாசிக்கலாம் . விளங்காத இடத்திலோ அல்லது சிந்தனையைத் தூண்டிவிடும் இடத்திலோ திரும்பவும் வாசித்து அசைபோட்டு நன்றாக ஜீரணித்து எமது அறிவை வளர்த்துக்கொள்ளலாம் . புத்தகத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எமக்குச் சரியெனப்படும் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம் .

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாவிடில் எமது செய்கைகள் எமது அனுபவத்திலேயே தங்கியிருக்கும் . ஆனால் பல புத்தகங்களை வாசிக்கும்போது பல அறிஞர்களுடைய அனுபவங்களையும் , சிந்தனைகளையும் , ஒரு விடயத்தை எடுத்துச் சொல்லுகின்ற திறமையையும் எமதாக்கிக் கொள்ளலாம் . எமது எழுதாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது . எமது நிலைப்பாட்டை பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் திறமையான முறையில் எடுத்துக்கூறும் ஆற்றல் தொழில் ரீதியாகவும் சிறந்த பலனைத்தரும் .

ஆனால் இப்போது இந்தப் பழக்கம் எமது சமூகத்தில் மிகவும் குறைந்து வருகிறது . முக்கியமாக மாணவர்கள் இளையர்கள் மத்தியில் துப்பரவாக இல்லாமல் போய்விட்டது .

வல்வை மாணவர்கள் , இளையர்கள் மத்தியில் புத்தக வாசித்தலில் ஆர்வத்தைக் கூட்டுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது . ” வல்வை புத்தகப் பூச்சிகள் ” ” Valvai Book Worms ” என்கின்ற வாசிப்பு மையம் ஆரம்பிக்கப்படுகிறது .

• இதிலே அங்கத்தவர்களாகச் சேரும் முதல் 50 பேருக்குத் தலா ரூபா 200 / = கொடுக்கப்படும் .

•நீங்கள் வாசிக்கும் புத்தகத்தின் சாராம்சத்தையும் , உங்கள் கருத்துக்களையும் ஒரு பக்கத்திற்குக் குறையாமல் எழுதி எனது மின்னஞ்சலுக்கு ( asrajendran@hotmail.com ) அனுப்பினால் ரூபா 500 / = முதல் 2000 / = வரை கொடுக்கப்படும் . இந்தத் தொகை கட்டுரையின் தராதரத்தில் தங்கியில்லை . ஒவ்வொரு மாதமும் பங்குபற்றும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது .

•அங்கத்தவர்களாக இல்லாதவர்களும் பங்கு பற்றலாம் . இவர்களுக்கு முதல் புத்தகப் பரிசுடன் ரூபா 200 / = அதிகமாகக் கொடுக்கப்படும் . புதிய அங்கத்தவர்களாகச் சேர்க்கப்படுவார்கள் .

•புத்தகங்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம் . •வல்வையில் ஏற்கனவே இயங்கிவரும் அமைப்பு ஏதாவது இந்த வாசிப்பு மையத்தைப் பொறுபேற்று நடத்த விரும்பினால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும் . ஊக்கத்தொகையை நான் தருகிறேன் . புத்தகம் வாசிப்பதற்கு உங்களுக்குத் தரப்படும் பணத்தை ஊக்கத்தொகையாகக் கருதவேண்டுமேதவிர இது கூலியில்லை . நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . மிகச்சிறிய குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது அவர் கோவிலுக்குப் போவதை ஊக்கப்படுத்துவதற்காக அவரது தந்தையார் அர்ச்சகர் மூலம் ஊக்கத்தொகை . ஒவ்வொரு நாளும் வாழைப்பழம் கொடுப்பாராம் . அதேமாதிரி உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் இந்த புத்தகங்களை வாசிக்க வாசிக்க உங்களில் ஏற்படுகின்ற மாற்றம் ஊக்கத்தொகையின்றியே மேலும் பல புத்தகங்களை வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் என்று நம்புகிறேன் .

மகிழ்வுடன் வாசிப்போம் .

Happy Reading .

அன்புடன்

Dr சபா இராஜேந்திரன்

Email : asrajendran@hotmail.com