Search

தும்பளை நாவலர் 21 வயதுக்குட்பட்டோர் அணியினை வீழ்த்தி சம்பியனாகியது வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணி.

தும்பளை நாவலர் 21 வயதுக்குட்பட்டோர் அணியினை வீழ்த்தி சம்பியனாகியது வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணி.

 கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் அமரர் லக்சன் மற்றும் அமரர் அஜந்தன் ஞாபகார்த்த 5 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட 21 வயதுக்குட்பட்ட மென்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டமானது இன்றைய தினம் 2022/10/02 இடம்பெற்றது. 

இவ் இறுதியாட்டத்தில் வல்வை 21வயதுக்குட்பட்டோர்  அணியினை  எதிர்த்து தும்பளை நாவலர் 21 வயதுக்குட்பட்ட அணியானது மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நாவலர் 21 வயதிற்குட்பட்ட அணியானது 4.3 பந்துபரிமாற்றம் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 37
ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணி சார்பாக அதிகபட்சமாக பந்துவீச்சில் மதிசங்கர் 1 பந்துபரிமாற்றத்தினை வீசி வெறும் 1 ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு 38 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணியானது இறுதிப்பந்தில் 5 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் ரஜீவனின் அதிரடி ஆறு ஓட்டத்துடன் வெற்றியிலக்கினை அடைந்து சம்பியனாகியது..வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நவீன் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு எதிரணியினை கட்டுப்படுத்திய வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணியின் மதிசங்கர் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சுற்றுத்தொடரின் தொடராட்ட நாயகனாக பந்துவீச்சு துடுப்பாட்டம் களத்தடுப்பு என சகலதுறைகளிலும் ஜொலித்த வல்வை 21 வயதுக்குட்பட்டோர் அணியின் சுதர்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.


இவ்வெற்றிக்கிண்ணத்துடன் 2022 ஆம் ஆண்டில் வல்வை அணி பெற்றுக்கொள்ளும் நான்காவது வெற்றிக்கிண்ணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.