தாயகத்தில் நாளை (15.10.2022) நடைபெற இருக்கும் கணித பெருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக்கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற முன்னேற்பாட்டுக்கூட்டமானது வல்வை முத்துமாரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு நாளை நடைபெற இருக்கும் கணித பெருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்தி முடித்திட அதற்கான செயற்பாட்டு முறைகளை கலந்தாலோசனை செய்து சிறந்த முறையில் நடத்திட அதற்கான திட்டவரைவுகளை அறிந்து கொண்டனர்.






