கேதார கெளரி விரத பூர்த்தி விசேட பூஜை நிகழ்வு உலகெங்கும் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கேதார கெளரி விரத பூர்த்தி விசேட பூஜை நிகழ்வு உலகெங்கும் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.

முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன்,பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று “அங்கனமே ஆகுக” என்று அருள் புரிந்தார்.