அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசாங்கத்தில் இருந்து தமது கட்சி வெளியேறும் என முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப் தீன் கருத்து வெளியிடுகையில்,
“சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை இது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தது.
அதிகாரப்பகிர்வைப் பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.