மாகாண சபைகளின் அதிகாரங்களை திருத்துவது தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் தாக்கல் :

மாகாண சபைகளின் அதிகாரங்களை திருத்துவது தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் தாக்கல் :
மாகாண சபைகளின் அதிகாரங்களை திருத்துவது தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் தாக்கல் :
மாகாண சபைகளின் அதிகாரங்களை திருத்துவது தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின்  பிரகாரம், திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் போது, மாகாண சபைகளின் அனுமதியை பெறுவது,  அருகில் உள்ள மாகாணங்களை இணைத்து ஒரு மாகாணமாக மாற்றுவது போன்றவை முதலில் திருத்தப்பட உள்ளன.
அதேவேளை புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குவை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.