இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவினால் தீர்வு வழங்க முடியாது என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என்ற போதிலும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு தமிழ் மக்களின் காயங்களை ஆற்ற வேண்டும் என்பதனை இந்தியா புரிந்து கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இந்தியா இலங்கைத் தமிழ் மக்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, இலங்கையின் நட்பு நாடு எனவும் , இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.