பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 91 வயதான பிலிப் வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே 2 வார காலம் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் 4 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும், ராணி எலிசபெத்தின் வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போதும், பிலிப்பின் உடல்நலம் திடீரென பாதித்தது குறிப்பிடத்தக்கது.