பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியாது என ஒருபோதும் தெரிவிக்கவில்லை – TNA

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியாது என ஒருபோதும் தெரிவிக்கவில்லை – TNA

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியாது என ஒரு போதும் குறிப்பிட்டதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் 2010ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்;டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் பதிலளிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எம்முடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் இலங்கை தொடர்பான நம்பகத் தன்மை அதிகரிப்பதுடன், புலம்பெயர் மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல் சட்டம் ஒழுங்கு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட காலத்தில் தாம் யோசனைகளை முன்வைத்ததகாவும், அதனை ஜனாதிபதி உதாசீனம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான தீர்வுத் திட்ட பரிந்துரைகளை முன்வைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு வடக்கில் பெருமளவிலான தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.