தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்,தமிழினத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மரணித்ததாக சிங்கள இனவெறி அரசு பொய் பரப்புரைகளை பரப்புகையில் இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பல செய்திகளை நல்வினையாகவும் தீவினையாகவும் வெளியிட்டது.
இப்பத்திரிகைகள் பிரபாகரனின் பொய்யான மரணம் தொடர்பாக அந்நாட்களில் பிரசுரித்து இருந்த விடயங்களை தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சக்கத்துக்கு அனுப்பி வைத்து உள்ளது.
இதில் குறிப்பாக தினமணி தமிழ் பத்திரிகை, பிரஜாவாணி கன்னடப் பத்திரிகை ஆகியவை வெளியிட்டு இருந்த கருத்துக்கள் மற்றும் அவதானங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படுதல் வேண்டும், இது நிறைவேறாத வரை ஒவ்வொரு தமிழ் பெண்ணின் கருப்பையிலும் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் என்று தினமணி எழுதி உள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையுடன் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்து விடவில்லை என்பதை இலங்கை அரசு உணர்தல் வேண்டும், தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை இன்னும் பல பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்று பிரஜாவாணி எழுதி உள்ளது.
எம் தலைவர் சாகவில்லை , என்றும் புலி ஓய்வதில்லை..!