ஒபாமாவிற்கு விஷக் கடிதம் அனுப்பிய பிரபல நடிகை கைது (வீடியோ இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு விஷக் கடிதம் அனுப்பிய நடிகையை பொலிசார் கைது செய்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன.

இந்த கடிதங்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த பின்னரே, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் ‘ரிசின்’ என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு(எப்பிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கும், நியூயார்க் மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன்(வயது 35) என்பது தெரிய வந்தது.

மேலும் கடந்த மே மாதம் 20ம் திகதி ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்ததும், இதற்கு அவருடைய கணவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் எப்பிஐ பொலிசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது விஷம் தடவிய கடிதம் அனுப்பிய விபரம் தெரிய வந்தது. ஆனால் ரிச்சர்ட்சன் இதை மறுத்துள்ளார். இவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க செய்தி
ஒபாமாவிற்கு விஷக் கடிதம் அனுப்பிய பிரபல நடிகை கைது (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 07:55.01 மு.ப GMT ]
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு விஷக் கடிதம் அனுப்பிய நடிகையை பொலிசார் கைது செய்தனர்.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன.

இந்த கடிதங்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த பின்னரே, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் ‘ரிசின்’ என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு(எப்பிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கும், நியூயார்க் மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன்(வயது 35) என்பது தெரிய வந்தது.

மேலும் கடந்த மே மாதம் 20ம் திகதி ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்ததும், இதற்கு அவருடைய கணவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் எப்பிஐ பொலிசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது விஷம் தடவிய கடிதம் அனுப்பிய விபரம் தெரிய வந்தது. ஆனால் ரிச்சர்ட்சன் இதை மறுத்துள்ளார். இவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.