தங்களுடைய எதிரிகளை உளவு பார்ப்பதற்காக பறவை வடிவிலான ரோபோவை அமெரிக்கா தயாரித்துள்ளது.
ரோபோ ரேவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறவை ரோபோ உளவு பார்ப்பது மட்டுமல்லாமல், எதிரி விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை மீது மோதி அவற்றை அழிக்கும் திறனுடையது.
வானத்தில் பறக்கும் போது நிஜமான பறவை போன்றே தோற்றமளிக்கும் என்பதால், எவருக்கும் சந்தேகம் ஏற்படாது.
மிகவும் எடைக்குறைவாக உள்ள இந்த ரோபோ அதிக ஓசை எழுப்பாமல் பறக்கும் என்பதால் எதிரிகளின் பகுதிக்குள் சந்தேகம் ஏற்படாமல் உளவு பார்க்க முடியும்.
வீடியோ கேமரா உள்பட ஆள் இல்லாத உளவு விமானத்தில் இருக்கும் அனைத்து சிறப்பு அம்சங்களும் இதிலும் உண்டு. இப்பறவை ரோபோ 10 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், இராணுவ ஆய்வுக் குழுவுடன் இணைந்து இந்த பறக்கும் ரோபோவை தயாரித்துள்ளனர்.