இலங்கையில் தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக தொடர்ந்தும் தகவல்கள் கிடைத்து வருவதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக வினைதிறனான விசாரணைகளை நடத்தவும் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் எலின் டேனஹோ மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுக்கும் பலவிதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.