வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
அவருடன் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட புலிகளின் முன்னாள் மகளீர் துறை பொறுப்பாளர் தமிழினி உள்ளிட்ட மூன்று முன்னாள் புலி உறுப்பினர்களை தேர்தலில் களமிறக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற பின்னர், தமிழினி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் கே.பி. தமிழினி ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
எவ்வாறாயினும் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.